அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் தோற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி- டோக்கியோ ஒலிம்பிக் 2020
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி அரையிறுதியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்ட இந்திய அணி 2-1 என்ற கணக்கில் போராடி தோல்வியுற்றது.
இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் முனைப்போடு விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் 2-1 என்ற கணக்கில் வீழ்ந்தது. ஆதலால் ஆகஸ்ட் 6 அன்று நடைபெறும் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி, கிரேட் பிரிட்டனை எதிர்கொள்கிறது. தங்க பதக்கத்திற்கான போட்டியில் அர்ஜென்டினாவும் நெதர்லாந்தும் மோதிக்கொள்கின்றன.
” தங்கமோ,வெள்ளியோ,வெண்கலமோ பதக்கத்தை தாண்டி இந்த அணி இந்த ஒலிம்பிக் தொடர் முழுக்க ஒரு அணியாக போராடியதைப் பார்க்கையில் நிச்சயம் ஒரு நாள் இதையெல்லாம் தாண்டிய ஒரு சாதனையைப் படைக்கும் என்ற நம்பிக்கை மனதினுள் எழுகிறது – நம்பிக்கை கொள்வோம் “