வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!
All India Bank Strike Postponement Idamporul
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி சம்மேளனம் அறிவித்து இருக்கிறது.
வாரத்தில் 5 நாள் வேலை, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியிருத்தி வருகிற ஜனவரி 30,31 நாட்களில் வேலை நிறுத்த போராட்டத்தை வங்கிகள் அறிவித்து இருந்த நிலையில் பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்காலிகமா வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
“ வழக்கம் போல ஜனவரி 30, 31 நாட்களில் வங்கிகள் இயங்கும் எனவும், பேச்சுவார்த்தை ஜனவரி 31-யில் நடக்கும் பட்சத்தில் அதில் சரியான தீர்வு கிடைக்கவில்லையெனில் மீண்டும் வேலைநிறுத்தம் துவங்கும் எனவும் வங்கி சம்மேளனம் எச்சரித்து இருக்கிறது “