தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா வரும் நேரம் பார்த்து அர்ஜுன் அம்மா அக்கா மற்றும் மாமா மூவரும் நாடகம் நடத்தினார்கள். அர்ஜுனின் அம்மா மற்றும் அக்கா இருவரும் சேர்ந்து அவரது மாமாவை திட்டினார்கள். எப்படி என் தம்பியை பற்றி இப்படி தவறாக கூறலாம் என்று கண்டிதார்கள். மேலும் அர்ஜுன் மிகவும் நால்வன், அவனை பொய் இப்படி ஒரு சிக்கலில் தள்ளி விட்டு இருக்கார் என்று கூறினார்கள். அதற்கு அவரும் தன்னை அசிங்க படுத்திய அர்ஜுனை நானும் அசிங்கப்படுத்தவே இப்படி செய்தேன் என்று குடித்து விட்டு உளருவது போல் பேசினார். இதை கேட்ட வசுந்தரா குழம்பினார். உடனே கார்த்திக்கு அழைத்து நடந்ததை கூறினார். இதை கேட்ட பின் தான் கார்த்திக் தன் அண்ணன் இதனால் தன கோவப்படுகிறார் என்று நினைத்தார். அதை பற்றி தமிழிடம் பேசவும் செய்தார். அர்ஜுன் எந்த தவறும் செய்ய மாட்டான். அவனை பற்றி எனக்கு தெரியும். அவன் யாருக்கும் எந்த கேட்டதும் செய்தது இல்லை. அவன் நம் தங்கையை திருமணம் செய்யும் முன்னே எனக்கு அவன் நல்ல நண்பன் என்று கார்த்திக் அர்ஜுனுக்காக பரிந்து பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…