Tamizhum Saraswathiyum Today Episode | 01.02.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுனை தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து கேலியும் கிண்டலுமாக பேசினார்கள். இதனால் அர்ஜுன் இதற்கு ராகினியை வைத்து தான் முடிவு கட்ட வேண்டும் என்று அடுத்த திட்டத்தை போட்டார். ராகினியிடம் தனக்கு அவரை விட்டு பிரிந்து இருக்கப்போவதை நினைத்து வருந்தினார். இனி ராகினி அவரது பயிற்சிக்கு சென்றுவிடுவார், அதே போல் நானும் கம்பேனி வேலைக்கு சென்று நாங்கள் எப்போவாவது தான் சேர்ந்து இருக்க முடியும். எங்களுக்குள் பிரிவு வருகிறதே என்று வேண்டும் என்றே புலம்பினார். இதை கேட்ட ராகினி இதற்கு அம்மாவிடம் பேசி வேறு வலி எதுவாக இருந்தாலும் செய்ய சொல்கிறேன் என்று கிளம்பினார். கோதையிடம் இதை பற்றி பேசவும் செய்தார். தனக்கு அர்ஜுனை விட்டு பிரிந்து இருக்க விருப்பம் இல்லை. அவர் வெளிக்கு சென்று வரும் நேரம் நான் வீட்டில் இருப்பேனா என்று தெரியாது. இது எங்கள் வாழ்க்கைக்கு சரி வராது என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author