Eeramana Rojave 2 Today Episode | 01.02.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவை பற்றி ஜீவாவிடம் பிரியா புலம்ப ஆரம்பித்தார். வீடு வந்து சேரும் வரை புலம்பினார். தன் தங்கை ஒரு பட்டாம்பூச்சி போல் இருந்தார், ஆனால் இந்த திருமணத்துக்கு பின் அவள் மொத்தமாக மாறிவிட்டாள் என்று கூறினார். மேலும் பார்த்திபன் அவளை அப்படி தாங்கியும், அப்படி அக்கறையாக பார்த்தும் காவ்யா மனம் மாறவில்லை என்றால் கண்டிப்பாக அதற்கு வேறு காரணம் இருக்கும் என்று கூறினார். ஜீவாவுக்கு காவ்யா எதற்காக இப்படி செய்கிறார் என்று தெரிந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்ததும் தேவி மற்றும் ரம்யா இருவரும் காவ்யா மீண்டும் வீட்டுக்கு வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். இவள் இனி இங்கு இருக்கக்கூடாது என்று கூறினார். ஆனால் அருணாச்சலம், கோர்ட்டில் இவர்களுக்கு விவாகரத்து கிடைக்கவில்லை. மீண்டும் ஒரு 6 மாதம் கணவன் மனைவியாக வாழ வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள் என்று கூறினார். ஆனால் தேவி மீண்டும் காவ்யா இந்த வீட்டில் இருக்கவே கூடாது என்று கூறினார். ஆனால் அருணாச்சலம் உறுதியாக காவ்யா இங்கு தான் இருப்பார் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author