மல்யுத்தம்: சில்வரை உறுதி செய்தார் ரவிக்குமார் தாஹியா – டோக்கியோ ஒலிம்பிக் 2020
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா, கஜகஸ்தானின் நூரிஸ்லாம் சனாயேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
23 வயதே ஆன ரவிக்குமார் தாஹியா முதல் பாதியில் பின் தங்கியிருந்த போதும் அதற்கு பின் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை தன் பக்கம் திருப்பினார். இதன் மூலம் இந்தியாவிற்கு பதக்க பட்டியலில் சில்வரை உறுதி செய்திருக்கிறார் ரவிக்குமார் தாஹியா.
இதற்கு முன்னர் 2012 லண்டன் ஒலிம்பிக்சில் சுஷில் குமார் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். அதற்கு பிறகு இரண்டாவதாய் ரவிக்குமார் தாஹியா இந்த ஒலிம்பிக்சில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார். ஆகஸ்ட் 5 நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஸ்யாவின் ஷாயுர் யுகுவே-யை எதிர்கொள்கிறார் இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா.
“ தங்கத்தை வென்று இந்தியக்கொடியை உலக அரங்கினுல் உயர உயர பறக்க செய்யுங்கள் ரவிக்குமார் தாஹியா “