Tamizhum Saraswathiyum Today Episode | 20.02.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பரிசோதனை செய்த பின் டாக்டர் கண்டிப்பாக அவருக்கு நல்ல செய்தி சொல்ல போகிறார் என்று நினைத்து சந்தோசமாக இருந்தார். ஆனால் அதற்கு மாறாக டாக்டர் இது வெறும் பித்த வாந்தி, நல்ல சத்துள்ள ஆகாரமாக சாப்பிட வேண்டும் என்று கூறினார். இதை கேற்தும் மனம் உடைந்து போனார் சரஸ்வதி. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார். பின் வீட்டுக்கு கிளம்பலாம் என்று கிளம்பும் நேரம் ராகினி மயக்கம் அடைந்தார். வீட்டில் அனைவரும் சரஸ்வதி நல்ல செய்தி சொல்ல மாட்டாரா என்று ஆவலாக காத்துக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் வந்ததும் சரஸ்வதி இனிப்பு எடுத்து அனைவருக்கும் கொடுத்து சந்தோசமாக பேசினார். இன்னொரு வாரிசு நம் வீட்டுக்கு வர போகிறது என்று கூறினார். மேலும் ராகினி கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறினார். அதை கேட்ட அனைவருக்குமே எரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author