நடிகர் சூரி ஹீரோவாக களை கட்டும் அடுத்தடுத்த திரைப்படங்கள்!
காமெடியனாக இருந்தவர் தற்போது ஹீரோவாக வரிசையாக அடுத்தடுத்த திரைப்படங்களை கையில் வைத்து இருக்கிறார் நடிகர் சூரி.
விடுதலை முதல் பாகம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன சூரி, அடுத்தடுத்து கொட்டுக்காளி, இயக்குநர் ராம் அவர்களின் ஏழு கடல் ஏழு மலை, விடுதலை 2, விக்ரம் சுகுமாறனின் திரைப்படம், காக்கிசட்டை இயக்குநர் துரை செந்தில்குமார் அவர்களின் திரைப்படம் என வரிசையாக தனது ஹீரோயிசத்தை காட்ட இருக்கிறார்.
“ நடிகர் சூரிக்குள்ளும் ஒரு ஹீரோ என்ற பயர் இருக்கும் என்பதை உணர்ந்த வெற்றிமாறனுக்கு தான் முதலில் நன்றியை சொல்லி ஆக வேண்டும், இன்னும் பல படங்களில் அத்திறமையை சூரி வெளிக்கொணர வேண்டும் என்பது தான் ரசிகர்கலின் ஆசையும் “