உடையை பார்த்து மதிப்பிட்டு டிக்கெட் எடுத்தும் உள்ளே அனுமதிக்க மறுத்த பிரபல திரையரங்கம்!
Theater Restricted Entry Of Some People Idamporul
உடையைப் பார்த்து மதிப்பிட்டு டிக்கெட் எடுத்தும் கூட இருவரை திரையரங்கிற்குள் அனுமதிக்காத பிரபல திரையரங்கு ஒன்றிற்கு இணையத்தில் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல திரையரங்கான ரோஹினி சில்வர் ஸ்கீரின்ஸ் திரையரங்கில் பிரபல படம் ஒன்றிற்கு இருவர் டிக்கெட் எடுத்து உள்ளே செல்ல முற்பட்ட போது அவர்களின் வெளிதோற்றத்தை பார்த்து விட்டு முதலில் அனுமதிக்க மறுத்து இருக்கிறது. பின்னர் அனைவரின் கூச்சலால் உள்ளே அனுமதித்து இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு இணையத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
“ நடிகர் ஜி வி பிரகாஷ் உள்ளிட்டோரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கலை என்பது அனைவருக்கும் சொந்தமானது. அதை அனைவரையும் சமமாக நடத்திட வேண்டும் என்று அனைவரும் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டு வருகின்றனர் “