நாளை முதல் அனைத்து தமிழக மருத்துவமனைகளிலும் முகக்கவசத்தை கட்டாயம் ஆக்கி இருக்கிறது தமிழக அரசு.
கொரோனா தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிப்பதை தொடர்ந்து, நாளை முதல் அனைத்து தமிழக அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசத்தை கட்டாயம் ஆக்கி இருக்கிறது தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை. ஒட்டு மொத்த கொரோனா பாதிப்புகள் ஆயிரத்தை கடந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
“ மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள், பொதுமக்கள், நோயாளிகள் என அனைவரும் பொறுப்பை உணர்ந்து முகக்கவசம் அணிந்தாக வேண்டும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் கருத்து தெரிவித்து இருக்கிறார் “