ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா வீட்டுக்கு வந்ததும், அவரது நெத்தியில் குங்குமம் இருப்பதை பார்த்து கோடீஸ்வரி கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினார். மஹாவும் நடந்ததை கூறினார், ஆனால் சூர்யாதான் அந்த நபர் என்று கூறவில்லை. பின் மஹாவுக்கு ஐஷ்வர்யாவின் வரன் பற்றி தெரிய வந்தது. அதுவும் அவருக்கு பிடிக்காத அந்த சூர்யா தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். அதே நேரம் நாளை சூர்யா தனியாக ஐஷ்வர்யாவை பார்த்து பேசி பழகிய பின் திருமணம் நிச்சயம் செய்யலாம் என்று கூறினார் ராஜலக்ஷ்மி. உடனே சூர்யா ஐஷ்வர்யாவுக்கு அழைத்து ட்ரீட் வேண்டும் என்பது போல் அழைத்தார். அவரும் இதற்காக பிரபா காலேஜ் ஃபீஸ் கட்ட வைத்து இருந்த பணத்தை எடுத்துச் சென்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…