மல்யுத்தம்: அரையிறுதிக்கு முன்னேறிய ரவிக்குமார் மற்றும் தீபக் புனியா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மல்யுத்தம் பிரிவில் ரவிக்குமார் தாஹியா மற்றும் தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவிற்கு மற்றுமொரு பதக்க நம்பிக்கையை பெற்றுத்தந்திருக்கின்றனர்.

மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா பல்கேரியாவின் வான்குளோவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே களத்தில் அதிரடி காட்டிய ரவிக்குமார் 14-4 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வான்குளோவை வீழ்த்தி அரையிறுதிக்குள் முன்னேறினார். மேலும் அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவ்வை எதிர்கொள்கிறார் இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா.

மல்யுத்தம் 86 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா சீனாவின் லின் சூசனை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் அதிரடியாக நுழைந்தார். மேலும் அரையிறுதியில் அமெரிக்க வீரர் டெய்லர் டேவிட் மோரீசை எதிர்கொள்கிறார் இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா.

” பதக்கத்திற்காக இன்னும் ஒரு போட்டி வென்றாக வேண்டும். தங்கத்திற்காக இன்னும் இரண்டு போட்டி வென்றாக வேண்டும். தங்கத்தையே எதிர்பார்த்து காத்திருக்கிறோம் வென்று வாருங்கள் “

About Author