SSMB 29 | ’ஹனுமனை மையமாக வைத்து எழுதப்படும் மகேஷ் பாபுவின் கேரக்டர்’

ராஜ்மவுலி மற்றும் மகேஷ் பாபு இணையும் திரைப்படத்தில், மகேஷ் பாபுவின் கேரக்டர் ஹனுமனை மையமாக வைத்து எழுதப்பட்டு வருகிறதாம்.

மகேஷ் பாபு அவர்களின் 29 ஆவது படத்தை ராஜ் மவுலி அவர்கள் இயக்குவது உறுதியாகிய நிலையில், படத்தில் மகேஷ் பாபுவுன் கேரக்டர் முழுக்க முழுக்க லார்ட் ஹனுமனை மையமாக வைத்து எழுதப்பட்டு வருகிறதாம். படத்தின் பெரும் பகுதிகளை அடர்ந்த அமேசான் காடுகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.

“ படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டுகளை வரிசையாக வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இத்திரைப்படம் இந்திய சினிமாவில் மற்றுமொரு மைல்கல்லாக இருக்குமாம் “

About Author