இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,633 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,633 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 7,633 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் ஒட்டு மொத்தமாக கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 61,233 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் 11 பேர் கொரோனாவிற்கு பலியாகியும் இருக்கின்றனர்.
உருமாறிய ஒமிக்ரான் வைரஸ்சே இந்த பரவலை அதிகப்படுத்தி இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான மருத்துவமனைகளில் மீண்டும் கொரோனோ வார்டுகள், படுக்கைகள் ஆயத்தப்படுத்தப்பட்டு உள்ளன. முதல் அலை, இரண்டாம் அலை போல் பாதிப்புகள் இல்லை எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
“ சீசனல் வைரஸ்கள் போல, கொரோனாவும் தேசத்தில் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. அதை ஒழிப்பது என்பது முடியாத காரியம், தற்காத்துக் கொள்வதே சிறந்தது என பல நாடுகளும் ஒன்றிணைந்து கருத்து தெரிவித்து வருகின்றன “