தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தான் செய்த தவறை உணர்ந்து பேசினார். சரஸ்வதியிடம் கூடவே இருந்து அவருக்கு அன்பாய், ஆதரவாய் பேசி, வேலையிலும் உதவியாக இருந்தார். பின் தமிழ், சரஸ்வதி மற்றும் நமச்சி மூவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். தமிழ் கம்பேனியில் வேலைகள் இப்போது நிறைய இருப்பதால், அடுத்து வேலைக்கு யாரையாவது சேர்க்க வேண்டும் என்று பேசினார்கள். அடுத்த நாள் தமிழ் மற்றும் நமச்சி வேலைக்கு கிளம்பினார்கள். சரஸ்வதிக்கு இன்று வேலை இல்லை, நாளை தான் செல்ல வேண்டும் என்று கூறினார். அதே நேரம் கார்த்திக் கம்பேனிக்கு கிளம்பினார். கோதை மற்றும் நடேசன் இருவரும் மருத்துவமனைக்கு செக்கப் சென்றார்கள். அர்ஜுன் மற்றும் அவரது குடும்பமே கோவிலுக்கு சென்றார்கள். அபி மட்டும் வீட்டில் இருந்தார். ஆனால் அவரும் திடீர் என்று அக்காவுக்கு உடம்பு சரி இல்லை என்று கிளம்பினார். அன்று வசுந்தராவை பார்த்துக்கொள்ள சந்திரகலா வந்து இருந்தார். ஆனால் அவரும் திடீர் என்று அவர் நகை வாங்க இப்போவே செல்ல வேண்டும் என்று பொறுப்பு இல்லாமல் கிளம்பினார். இதனால் வசுந்தரா வீட்டில் தனியாக இருந்தார். அந்த நேரம் மாடியில் ஏறும்போது தவறி கீழே விழுந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….