aaha Kalyanam Today Episode | 27.04.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா வீட்டில் தாலி, முகூர்த்த புடவை என்று திருமணத்துக்கு வாங்கிய அனைத்தையும் வைத்து பூஜை செய்தார்கள். பூஜை அனைத்தையும் செய்து முடித்ததும் அந்த சீர் தட்டுகளை பெண் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார்கள். அதே நேரம் கோடீஸ்வரி வீட்டில் முகூர்த்தகால் ஊன்ற, நலங்கு வைக்க ஏற்பாடுகள் நடந்தது. ஐஷ்வர்யாவுக்கு நலங்கு வைக்க அவரும் தயார் ஆனார்கள். வீட்டுக்கு வந்த அனைவருமே அவருக்கு நலங்கு வைத்தார்கள். கடைசியில் கோடீஸ்வரி வைப்பது தான் முக்கியம் என்று கூறினார்கள். அதை வைக்கும்போது ஐஷ்வர்யா போன் பார்த்து கை தவறி மஹா நெற்றியில் அந்த குங்குமத்தை வைத்தார். உடனே கோடீஸ்வரிக்கு ஜோசியர் சொன்னது நியாபகம் வந்தது. இது எதோ தவறாக இருக்கிறது என்று நினைத்தார். அதே போல் சூர்யாவுக்கும் நலங்கு வைத்து குடும்பமே சந்தோசமாக இருந்தார்கள். ஆனால் தாலியை கௌதம் எடுத்து பார்த்தால் ராஜலக்ஷ்மி கொஞ்சம் வருத்தத்தில் இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author