மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் எம் எஸ் தோனி பயோபிக்!
MS Dhoni Untold Story Re Release Plan Idamporul
எம் எஸ் தோனி அவர்களின் பயோபிக் மீண்டும் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எம் எஸ் தோனி அவர்களுக்கு இன்றும் இருக்கும் வரவேற்பை பார்த்து விட்டு, எம் எஸ் தோனி பயோபிக்கை எடுத்த படக்குழு, அதை மீண்டும் ரீ ரிலிஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. வருகின்ற மே 12 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மீண்டும் திரையரங்குகளில் ரசிகர்கள் படத்தை காணலாம் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த மிகப்பெரிய ரீ ரிலீஸ் இது, தற்போதே ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் தோனி ரசிகர்கள் ரீ ரீலிஸ் அப்டேட்டை பேனர்கள் வைத்து கொண்டாட துவங்கி விட்டனர் “