தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, உமாபதி எந்த ஆடரும் தரமாட்டார், மேலும் இப்போது கொடுத்த ஆடரையும் திரும்ப கேட்கிறார் என்பதை சரஸ்வதியிடம் கூறினார் தமிழ். இனி அடுத்து என்ன செய்வது, நமது தொழிலாளர்களுக்கு எப்படி சம்பளம் போடுவது, எப்படி இருக்கும் பண நெருக்கடியில் சமாளிப்பது என்று ஒன்றும் புரியாமல் இருந்தார்கள். அதே நேரம் வசுந்தராவுக்கும் இந்த விஷயம் தெரிந்தது. பின் சந்திறவிடமிதை பற்றி பேசி அதற்கு வழியும் கேட்டார். அதற்கு சந்திரகலாவும் அவருக்கு ஒரு திட்டம் போட்டார். கோதையின் சொத்தில் ஒரு பங்கை தமிழுக்கு கொடுக்க ஏற்பாடு செய்ய நினைத்தார். அதற்கு வீட்டில் அனைவரையும் வைத்து பேசவும் செய்தார். அப்போது ராகினி இந்த சொத்தில் தமிழுக்கு பங்கு கொடுக்க கூடாது என்று கூறினார். ஆனால் வசுந்தரா அவருக்கு இதில் முழு உரிமை இருக்கிறது, அதை எப்படி குடுக்க முடியாது என்று கூறலாம் என்று கேட்டார். அதே போல் நடேசனும் இந்த கம்பேனி இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் தமிழ்தான், அதனால் கண்டிப்பாக அவனுக்கும் இதில் முழு உரிமை உள்ளது என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….