Aaha Kalyanam Today Episode | 25.05.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா அவர் சூர்யா வீட்டில் ஒரு சின்ன பழைய பொருட்கள் வைக்கும் இடத்தில் தங்கி கொள்கிறேன் என்று கூறினார். அதற்காக அந்த அறையை சுத்தம் செய்தார். என்னதான் சூர்யா மற்றும் ராஜா லக்ஷ்மி இருவரும் மஹா மேல் நெருப்பை கொட்டுவதை போல் பேசினாலும், வீட்டில் மற்ற அனைவரும் அவரிடம் நல்ல விதமாகவே பேசினார்கள். மஹாவை சாப்பிட அழைத்தார்கள். ஆனால் சூர்யா மஹா சாப்பிட வருவதை பார்த்து எரிச்சல் அடைந்தார். இவளோ பார்த்தாலே என்னை ஏமாற்றியது தான் நினைவில் வருகிறது என்று கூறினார். அதே நேரம் கோடீஸ்வரி மஹாவை பற்றி விசாரிக்க சித்ராவுக்கு அழைத்து பேசினார். ஆனால் அவர் இங்கே மகாராணி போல் இருக்கிறார் என்று பொய் சொல்லி சமாளித்தார். அதே நேரம் ஐஷ்வர்யாவுக்கு மஹா சூர்யா இருவருக்கும் திருமணம் நடந்ததை பேப்பரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் .அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author