Aaha Kalyanam Today Episode | 26.05.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சித்ரா கோடீஸ்வரி இடம் பேசினார். அப்போது ஐஷ்வர்யா பற்றியும் அவர் புலம்பினார். மஹா நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்று கூறினார். இதை வைத்து மஹாவிடம் சித்ரா பேசினார். உன் அம்மா ஐஷ்வர்யாவை நினைத்து கவலையாக உள்ளார் என்று கூறினார். இதை கேட்டதும் மஹா வருந்தினார். மேலும் ஐஷ்வர்யாவை காணவில்லை என்று ஒரு புகார் கொடுத்தால் மட்டும் தான் அவரை கண்டு பிடிக்க முடியும் என்று கூறினார். இதை கேட்டதும் மஹா தானே அந்த புகாரை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். பின் சித்ரா கொடுத்த திட்டத்தின்படி இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் மஹா போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்தார். அதே நேரம் சித்ரா மஹா வீட்டை விட்டு இரவில் வெளியே சென்றதை சூர்யாவிடம் சொல்லி அவரது கோவத்தை தூண்டினார். இதனால் வர்களுக்குள் மேலும் சண்டை வரும் என்று நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author