தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவரது வேலையை சீக்கிரம் முடித்து விட்டு, நமச்சியிடம் மீது வேலையை செய்யும்படி கூறிவிட்டு படத்துக்கு கிளம்பினார். வீட்டுக்கு வந்தால் வீடு பூட்டி இருந்தது. உடனே அவர் வேலை செய்யும் இடத்துக்கு வந்தார். அங்கும் கடை பூட்டி கிடந்தது. பின் அருகில் இருக்கும் ஒரு பூ விற்கும் அம்மாவிடம் கேட்டார். சரஸ்வதியை பார்த்தாரா என்று விசாரித்தார். அவரும் காலையில் வேலைக்கு செல்லும்போது தான் பார்த்தேன் என்று கூறினார். ஆனால் உள்ளிருந்து ஒரு நபர் சரஸ்வதியின் நடவடிக்கை சரி இல்லை, அவர் வேலை செய்யும் இடத்தில் இருந்து அடிக்கடி இது போல் வெளியே சென்று வருகிறார். பெரிய இடத்து பிள்ளை என்பதால் தான் இதை எடுத்து கூறுகிறேன். பார்த்து கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். உடனே தமிழ் அவரை கன்னத்தில் அறைந்து என் சரஸ்வதியை பற்றி தவறாக பேச நீ யார் என்று கேட்டார். மேலும் வேலைக்கு செல்லும் பெண்களை இப்படி அசிங்கமாக பேச எப்படி உன்னால் முடியும் என்று கேட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…