ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, கோடீஸ்வரி அவரது வீட்டுக்கு திரும்பினார். அவரை பார்த்ததும் பிரபா மற்றும் அவரது அப்பா இருவரும் ஆவலோடு எதிர்பார்த்து ஓடி வந்தார்கள். மஹா அவரது வீட்டில் நிம்மதியாக, சந்தோசமாக ஒரு வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டாரா என்று கேட்டார்கள். ஆனால் கோடீஸ்வரி மஹாவின் நிலையை சொன்னால் அவர்களும் வருத்தப்படுவார்கள் என்று பொய் சொன்னார். அங்கு அவளை மரியாதையாக நடத்தினார்கள். அதே போல் என்னையும் அனைவருமே நல்லபடியாக வரவேற்றார்கள் என்று கூறினார். ஆனால் அவரது முகத்தில் எந்த சந்தோசமும் இல்லை, மேலும் அவர் சொல்வது பொய் தான் என்று தெளிவாக தெரிந்தது. பின் மஹாவை பாரம்பரிய நகையை போட்டுக்கொண்டு வரவேற்புக்கு தயார் ஆக வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் மஹா நான் வரவேண்டும் என்றால் சூர்யா தன்னை மனைவி என்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே நான் வருவேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…