ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, கோடீஸ்வரி தன்னை ஒரு ஜோக்கர் போல் வேடம் போட்டு , யாருக்கும் தெரியாமல் வரவேற்பு நடக்கும் இடத்துக்கு வந்து இருந்தார். கொஞ்ச நேரத்தில் பாக்கியலட்சுமி, கோடீஸ்வரி இருவரும் மாறி வேடத்தில் வந்து இருப்பதை பார்த்து விஜய் பேசினார். அவருக்கும் இந்த விஷயம் தெரியும் என்று கூறினார். கோடீஸ்வரி தன்னை யார் பார்த்தாலும் கண்டு பிடித்து விடுவார்களோ என்று பயந்து பயந்து இருந்தார். ஆனால் அவரை யாராலும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அதே நேரம் அங்கு ஜூஸ் கொடுக்கும் நபராக ஐஷ்வர்யா அதே இடத்துக்கு வந்து இருந்தார். தான் இந்த வீட்டு மருமகளாக வர வேண்டியது, இப்படி ஜுஸ் கொடுக்கும் வேலை செய்யும் நிலமை வந்து விட்டதே என்று கோவம் கொண்டார் . சூர்யா குடும்பமே அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது. அதற்கு முன்பே டிவி பத்திரிக்கை என்று அனைவரும் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இருந்தும் குடும்பமே மஹா வருகைக்கு காத்திருந்தது. மஹா வருவாரா மாட்டாரா என்று ஊரே எதிர் பார்த்து இருந்தது. சூர்யா மற்றும் அவரது அம்மா இருவருமே எரிச்சல் அடைந்தார்கள். இவளுக்காக இந்த குடும்பமே காத்து இருக்க வேண்டுமா என்று கோவம் கொண்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….