தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் உமாபதியை பார்க்க கிளம்பினார். அங்கு அவரது வேலையை மேலும் அதிகரிக்க பேசினார். ஆனால் உமாபதி தமிழுக்கு இருக்கும் நேர்மைக்கும் இந்த நடக்க இருக்கும் பிரசிடென்ட் போட்டியில் தமிழ் நின்றால் நல்லது என்று கூறினார். மேலும் இதற்கு முன் கோதை அம்மாதான் அதற்கு இத்தனை வருடங்களாக இருந்தார், ஆனால் அதற்கு போட்டியிட தமிழுக்கு எல்லா தகுதியும் உள்ளது என்று அறிவுறுத்தினார். ஆனால் தமிழ் தனக்கு அதில் விருப்பம் இல்லை, தன்னால் கோதையை எதிர்த்து போட்டியில் நிற்க முடியாது என்று கூறினார். பின் வீட்டுக்கு வந்தது சரஸ்வதி நமச்சி அனைவரும் இதை கேள்விப்பட்டு சந்தோசம் அடைந்தார்கள். தமிழ் மனதில் தன் அம்மாவை நினைக்க தான் செய்கிறான் என்று மகிழ்ந்தார்கள். அடுத்து நடேசனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது, உடனே தமிழை நினைத்து பெருமை பட்டார். பின் கோதை வீட்டிலும் இதை பற்றிய பேச்சு வந்தது. உமாபதி தமிழை நிறுத்தினால் நல்லது என்று சொன்னதும், அதை அவர் மருத்ததையும் கேள்விப்பட்டு கோதை, நடேசன் இருவருமே பெருமை பட்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…