பெண்களை மதிக்க தெரிந்த ஒரு ஆணை தான் திருமணம் செய்து கொள்வேன் – அஞ்சலி
முதன் முறையாக நடிகை அஞ்சலி அவரது திருமணம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.
கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வரும் அஞ்சலி தனது திருமணம் குறித்து மனம் திறந்து இருக்கிறார். பெண்களை மதிக்க தெரிந்த ஒரு ஆணை தான் திருமணம் செய்து கொள்வேன், காதல் அன்பு எல்லாம் அதற்கடுத்து தான் என கூறி இருக்கிறார்.
“ இன்னும் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது இந்த சினிமாவில், அதற்கு பின் தான் திருமணம் என்றும் அஞ்சலி கூறி இருக்கிறார் “