தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மீது சங்கத்து உறுப்பினர்கள் அனைவரும் கோவத்தில் கொந்தளித்தார்கள். லஞ்சம் கொடுத்து ஓட்டை வாங்கிவிடலாம் என்று நினைத்துவிட்டார். அவர் மீது வைத்து இருந்த நம்பிக்கை போய்விட்டது என்று கூறினார்கள். தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் இதை எங்கள் தரப்பில் யாருமே செய்யவில்லை என்று கூறினார்கள். ஆனால் அதை யாரும் கேட்கவில்லை. கேட்க தயாராகவும் இல்லை. தமிழ் தான் அனைவருக்கும் அழைத்து இப்படி பேசி உள்ளார் என்று கூறினார்கள். இருந்தும் தமிழ் தனக்கு மாலை 5 மணி வரை அவகாசம் தருமாறு கேட்டுக் கொண்டார். அதையும் அர்ஜுன் அதற்குள் எதாவது பொய் சொல்லி எமாற்றவே நேரம் கேட்கிறார் என்று கூறினார். ஆனால் தமிழ் அதை கண்டு பிடிக்க கிளம்பினார். அமைச்சரின் உதவியோடு அனைவருக்கும் அழைத்த நம்பரை வைத்து யார் என்று கண்டு பிடித்து தருமாறு கேட்டுக்கொண்டார். அவரும் உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….