ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா தேடி வந்த ஐஷ்வர்யாவை அவரது அறையில் சென்று தேடினார். ஆனால் அவரை அந்த அறையில் காணவில்லை. யாரும் இருந்ததற்கான தடயமும் இல்லை. சுற்றி பார்த்து ஐஷ்வர்யா இங்கு இருந்து தப்பித்து போய் விட்டாள் என்று தெரிய வந்தது. பின் அந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா வீடியோவை காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அதிலும் எந்த வித வீடியோவும் இல்லை. இதனால் எரிச்சல் அடைந்தார் சூர்யா. இந்த நல்ல வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோம் என்று கோவம் கொண்டார். அதே நேரம் அந்த ஹோட்டலுக்கு மஹாவும் வந்து சேர்ந்தார். அதையும் கோடீஸ்வரி பார்த்தார். மேலும் கௌத்தமும் பார்த்துவிட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….