Mahanadhi Serial Today Episode | 05.07.2023 | Vijaytv
மகாநதி தொடரில் இன்று, கங்கா குமரனின் நிலையை பார்த்து வருத்தம் அடைந்தார். அவருக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்தார். அவருக்கு சாப்பாடு ஊட்டுவது, அவருக்கு மருந்து போட்டு விடுவது, அவருக்கு மாத்திரை கொடுப்பது என்று அனைத்தையும் செய்தார். மேலும் காவேரி, யமுனா மற்றும் நர்மதா அனைவரும் அவரை கிண்டல் செய்து பேசும்போது கூட அவரை விட்டுக்கொடுக்காமல் பேசினார். அப்போது கூட குமரன் எதனால் அடிபட்டது என்று கூறவில்லை. பின் யமுனா தன்னை தானே ஃபோட்டோ எடுத்துக்கொண்டு இருந்தார். அதை பார்த்த நிவின், நான் எடுத்து தருகிறேன் என்று கூறினார். அவர் எடுத்த புகைப்படங்களை பார்த்து பார்த்து ரசித்தார். பின் நிவின் காவேரி இருவரும் நாளை ஊருக்கு செல்வது பற்றி பேசினார்கள். இன்னும் ஒரு வாரம் கழித்து போகலாமே என்று ஆசை பட்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…