தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இடம் வசுந்தரா கொடுத்த பத்திரிக்கை அதில் அவர்களது பெயர் போட்டது. வீட்டுக்கு அவர்கள் வரவேண்டும் என்று கூறுவது என்று அனைத்தையும் கூறினார். அதை கேட்டு தமிழ் நம்மால் வசுந்தராவுக்கும் குழந்தைக்கும் எந்த பிரச்னையும் வர கூடாது. நாம் போகாமல் இருப்பது தான் நல்லது. அந்த வீட்டுக்குள் நான் வரவே மாட்டேன். அது இந்த ஜென்மத்தில் நடக்காது. நான் அம்மாவோடு சேருவேன் என்று கனவிலும் நினைக்காதே என்று தமிழ் கூறினார். இருந்தும் சரஸ்வதிக்கு ஒரு சின்ன ஆசை, எப்படியாவது இவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று. அதே நேரம் பத்திரிக்கையில் தமிழ் மற்றும் சரஸ்வதி பெயரை போட்டு இருப்பதை பார்த்து கார்த்திக், ராகினி மற்றும் அர்ஜுன் அனைவரும் கொடுத்து போனார்கள். ராகினி தன் புருஷனை கொலை செய்ய முயற்சி செய்தவனை எப்படி பத்திரிக்கையில் போடலாம் என்று கேட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…..