தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா குழந்தைக்கு பெயர் சூட்டு விழா. ஆனால் அதற்கு சரஸ்வதி போக வேண்டாம் என்று யோசித்தார். தான் குழந்தையை தூக்கினாள் தோஷம் என்று நினைத்து தயங்கினார். ஆனால் வசுந்தரா அவருக்கு அழைத்து கண்டிப்பாக அவர் வர வேண்டும் இல்லை என்றால் விழாவை நிறுத்தி விடுவேன் என்று கூறினார். மேலும் இதே போல் எனக்கு குழந்தை இல்லாமல் இருந்தால் என்னையும் இதே போல் ஒதுக்கி வைத்து பார்பீர்களா என்று கேட்டார். இதனால் சரஸ்வதியும் வர சம்மதித்தார். அர்ஜுன் குடும்பம் தமிழ் சரஸ்வதி வருவதற்குள் எப்படியாவது இந்த விழாவை ஆரம்பித்து பெயர் வைத்து விடலாம் என்று அவசர படுத்தினார்கள். ஆனால் வசுந்தரா கண்டிப்பாக தமிழ் மற்றும் சரஸ்வதி வந்தே ஆக வேண்டும் என்று கூறினார். அதிலும் ராகினி இதனை பேர் இருக்கிறோம் நாங்கள் முக்கியம் இல்லையா என்று கத்தினார். சற்று நேரத்தில் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் வந்து சேர்ந்தார்கள். சரஸ்வதி ஆசை தீர குழந்தையை தூக்கி கொஞ்சினார். பின் மகிழன் என்று பெயர் சூட்டப்பட்டது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….