ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா புகையில் இரும ஆரம்பித்தார். அதனால் மஹா அவரை அழைத்து வந்து நடு வீட்டில் படுக்க வைத்தார். தானே தைலம் தேய்த்து விடுகிறேன் என்று கூறினார். முதலில் சூர்யா வேண்டாம் என்று கூறினார். ஆனால் பின் மஹா தேய்க்க ஆரம்பித்தார். மஹா அவரை கிச்சு கிச்சு மூட்ட ஒரே சிரிப்பு சத்தமாக இருந்தது. அதை பார்த்து கோடீஸ்வரி மற்றும் பிரபா ரசித்தார்கள். அதே நேரம் ராஜலக்ஷ்மி மற்றும் சித்ரா மஹா வீட்டை கேட்டு கெட்டு வந்தார்கள். அதுவும் ஐஷ்வர்யாவே வழி சொல்லி வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். ராஜலக்ஷ்மி தன் மகனுக்கு மஹா தைலம் தேய்த்து விடுவதை பார்த்து எரிச்சல் அடைந்தார். உடனே கத்த ஆரம்பித்தார். இந்த மாதிரி ஒரு வீட்டுக்கு என் மகனை நான் அனுப்பி இருக்கவே கூடாது. அதுவும் நடு வீட்டில் கைலியை கட்டிக்கொண்டு சூர்யாவை பார்க்கவே அருவெறுப்பாக இருக்கிறது என்று கூறினார். பின் சூர்யாவை உடனே வீட்டுக்கு வர வேண்டும் என்று கூறினார். ஆனால் சூர்யா வர மறுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…..