Mahanadhi Serial Today Episode | 12.07.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, காவேரி காய்கறி, பழங்கள் வாங்க அருகில் இருக்கும் கடைக்கு சென்று இருந்தார். அதே கடைக்கு நிவினின் அம்மா அப்பா இருவரும் வந்து இருந்தார்கள். காவேரி நிவின் உடன் ஃபோனில் பேசிக்கொண்டு இந்த கடையில் இருக்கிறேன் என்று கூறினார். உடனே நிவின் அந்த கடைக்கு கிளம்பிவிட்டார். அவர் வந்து சேர்வதற்குள் ஜெயா காவேரியின் கூடையை மாற்றி எடுத்து சென்றார். அதை திருப்பி கேட்டதற்கு சண்டை பிடித்தார். இது என்னுடைய கூடை என்று சண்டை போட்டார். பின் கடைசியில் இது காவேரியின் கூடை என்று தெரிந்தது. இருந்தும் ஜெயா தன் தவறை ஒப்புக்கொள்ளவில்லை. அவர் சார்பாக நிவின் அப்பா மன்னிப்பு கேட்டார். கங்கா கடைக்கு போக ரெடியாக இருந்தார். ஆனால் குமரன் முகம் வாட்டமாக இருந்தது. கங்காவை தனியாக அழைத்து தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து விட்டேன் என்று கூறினார். மேரிக்கு அவசர தேவை அதனால் கொடுத்தேன் என்று கூறினார். மேலும் வேறு எந்த பணமும் இல்லை என்றும் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author