Aaha Kalyanam Serial Today Episode | 13.07.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா கோடீஸ்வரி வீட்டில் இருந்த நிலையை பார்த்து ராஜலக்ஷ்மி கொதித்து போய் இருந்தார். வீட்டுக்கு வந்து கத்தி கூப்பாடு போட்டார். தன் பேச்சுக்கு மரியாதை இல்லை. தான் கூப்பிட்டும் அவன் வரவே மாட்டேன் என்று கூறிவிட்டான் என்று புலம்பிதள்ளினார். அவனை எதோ மாயம் மந்திரம் செய்து மாற்றி விட்டார்கள் என்று கூறினார். வீட்டில் அனைவரும் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் முடியவில்லை. அதே நேரம் சூர்யா, தான் இந்த வீட்டில் இன்று இரவு தங்கி இருந்தால் தான் அந்த ஐஷ்வர்யாவை கண்டு பிடிக்க முடியும். கண்டு பிடித்தால் தான் இந்த மஹாவின் உண்மை முகம் வெளியே வரும், அவளை இங்கேயே விட்டுவிட்டு வீட்டுக்கு செல்லலாம் என்று திட்டம் போட்டு இருந்தார். அதற்கு ஏற்ப ஐஸ்வர்யாவும் அவரது அம்மாவை பார்க்க அவரது வீட்டுக்கு முன் ஒளிந்து இருக்கிறார். எப்படியாவது தன் அம்மாவை பார்த்து பேச வேண்டும் என்று இருக்கிறார். ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை அமையவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author