Tamizhum Saraswathiyum Today Episode | 14.07.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இந்த பிரச்சனைக்கு தலைவராக இருந்து என்ன செய்ய போகிறார். யாருக்கு ஆதரவாக இருக்க போகிறார் என்று அனைவருமே ஆவலாக இருந்தார்கள். ஆனால் தமிழ் யாரிடமும் அவரது முடிவை பற்றி பேசிக்கொள்ளவில்லை. முதலில் கோதை அம்மாவின் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து கூறினார். சட்டப்படி பார்த்தால் உமாபதி தான் கோதைக்கு 20 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்பது போல் பேசினார். ஆனால் கடைசியில் இப்படி திடீர் என்று காண்ட்ராக்ட்டை நிருதியதற்கு முதல் காரணம் கோதை கம்பேனியின் கார்த்திக் மற்றும் அர்ஜுன் தான். அவர்கள் சரஸ்வதி கம்பேனியில் இருந்து பொருட்களை திருடியதால் தான் அவர் இப்படி ஒரு முடிவு எடுத்தார். அதனால் நியாயப்படி உமாபதி மீது எந்த தவறும் இல்லை என்று கூறினார். இதனால் கோதை எரிச்சலில் வீட்டுக்கு திரும்பினார். அனைவருமே தமிழ் எடுத்த முடிவுக்கு வாழ்த்து கூறினார்கள். வீட்டில் அனைவரும் தமிழ் கோதையை அசிங்கப்படுத்தவே இப்படி செய்கிறான் என்று ராகினி கத்தினார். அர்ஜுன் அவரது குடும்பம் அனைவரும் தமிழை தவறாகவே சித்தரிதார்கள். கடைசியில் கோதையிடம் இந்த நஷ்டத்தை ஈடு செய்ய வேறு ஒரு வழி உள்ளது என்று அர்ஜுன் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author