ஆஸ்திரேலியாவை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி – டோக்கியோ ஒலிம்பிக் 2020
டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிர் ஹாக்கி பிரிவு காலிறுதியில் மூன்று முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் கம்பீரமாய் நுழைந்திருக்கிறது நம் இந்திய மகளிர் ஹாக்கி அணி.
Pool A-வில் நான்காவது இடத்தை பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி, அரையிறுதிக்கு தகுதி பெற இதுவரை தோல்வியையே அடையாது Pool B-யில் முதல் நிலையில் இருக்கும் பலம் வாய்ந்த அணியான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டாக வேண்டும் என்ற சூழல். ஆம் இன்று எதிர்கொண்டனர் நம் இந்திய சிங்கங்கள். இருபத்தி இரண்டாவது நிமிடம் குர்ஜித் கவுர் பெனால்ட்டி கார்னர் மூலம் இந்தியாவிற்கு பெற்று தருகிறார் ஒரு கோல். வியக்கிறது அந்த சாம்பியன் ஆஸ்திரேலிய அணி. ஆம் அதுவே இந்தியாவின் வெற்றிக்கான கோல். ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி மூன்று முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை வென்று கர்ஜித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.
உலகின் இரண்டாம் நிலை அணியான ஆஸ்திரேலியாவை காலிறுதியில் துவம்சம் செய்து நம் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்குள் நுழைந்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்வை தருவதாய் இருக்கிறது.
“ இதுவரை எந்த ஒலிம்பிக்கிலும் இந்திய மகளிர் அணி எட்டாத உயரம் இது, சாதித்திருக்கிறது இந்த கூட்டத்தின் பலம் “
\’ Go For Gold Lionesses, Chak De India \’