Mahanadhi Serial Today Episode | 20.07.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, காவேரி பசுபதி உடன் வாக்குவாதம் செய்தார். அதில் நேர்மையாக அவர்கள் இல்லை என்று கூறினார். பின் பசுபதியிடம் இனி நடக்க போகும் அனைத்து போட்டிகளிலும் தான் கலந்து கொள்வேன். கலந்து கொண்டு அனைத்து பரிசுகளையும் நான் வெல்வேன் என்று கூறினார். அதை கேட்டு பசுபதி மற்றும் ராகினி இருவரும் சிரித்தார்கள். இவளால் அதை எல்லாம் செய்ய முடியாது என்று கூறினார்கள். ஆனால் காவேரி அவர் சொன்னது போல் நடந்த அனைத்து போட்டியிலும் கலந்து கொண்டார். உறியடி, ஓட்டப்பந்தயம் என்று நடந்த அத்தனை போட்டியிலும் கலந்து கொண்டு முதல் இடத்தையும் பிடித்தார். இதனால் அதிர்ச்சியில் இருந்தார்கள் பசுபதி மற்றும் ராகினி. இதனால் நிவின் காவேரிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இந்த தைரியம் எப்போதும் அவரிடம் இருக்க வேண்டும் என்று கூறினார். அவர்கள் சேர்ந்து இருப்பதை பார்த்து பசுபதி கோவம் கொண்டார். ராகினியை அந்த நேரத்தில் அவர்களை பார்க்கவிடாமல் பார்த்துக்கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author