தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நடேசன், வசுந்தரா இருவர் திட்டப்படி சரஸ்வதி கடைக்கு அருகில் கார் டயர் பஞ்சர் ஆக்கினார்கள். அதற்கு நமச்சி அவரது கடைக்கு அருகில் ஒரு ஆணியை போட்டு வேண்டும் என்றே பஞ்சர் ஆக்கினார்கள். பின் நடேசன் அருகில் எதோ ஒரு மெக்கானிக் கடை இருக்கிறது என்று தெரியாதது போல் நடித்து அந்த கடைக்கு வந்தார்கள். கொதையும் வந்தார். ஆனால் அங்கு அது சரஸ்வதி ஆரம்பித்த கடை என்று தெரிந்ததும் உடனே அங்கிருந்து கிளம்பலாம் என்று கூறினார். ஆனால் நடேசன் அதை எப்படியோ சமாளித்து வந்த விஷேஷத்தில் கலந்து கொள்ளாமல் போவது நல்லது இல்லை. நம் மருமகளுக்கு நம் ஆசிர்வாதம் வேண்டும் என்று கூறினார். அதையும் கோதை ஒப்புக்கொண்டு பூஜையில் கலந்து கொண்டார். அதே நேரம் கார்த்திக் மற்றும் அர்ஜுன் இருவரும் அந்த வழியில் சென்றார்கள். அந்த வழியில் நடேசன் வண்டி பஞ்சர் ஆகி இருப்பதை பார்த்து என்ன ஆனது என்று பதரினார்கள். பின் அருகில் இருக்கும் மெக்கானிக் கடையில் பார்க்கலாம் என்று வந்தார்கள். ஆனால் அது சரஸ்வதியின் கடை என்று தெரிந்ததும் கோவத்தில் கத்தினார்கள். ஆனால் கோதை அவர்களையும் பூஜையில் கலந்து கொள்ள வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…