தப்பாய் போன மாமன்னன், ரத்னவேலை கொண்டாடும் ரசிகர்கள்!
சமூக நோக்குடன் எடுக்கப்பட்ட மாமன்னன் திரைப்படத்தில், வில்லன் ஆன ரத்னவேலை ஒரு சில ரசிகர்கள் கொண்டாடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மாமன்னன் என்ற கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம், தற்போது ரசிகர்களால் தப்பாக புரிந்து கொள்ளப்பட்டு, அத்திரைப்படத்தின் வில்லன் ரத்னவேல்க்கு எடிட்களை பறக்க விட்டு, ரத்னவேலை கொண்டாடி வருகின்றனர். கோவை ரசிகர்கள் ஒரு கட்டம் தாண்டி தற்போது போஸ்டர்களில் ரத்னவேலை சேர்த்து அடித்து வருகின்றனர்.
“ மாரி செல்வராஜ் எந்த புரிதலுக்காக எடுத்தாரோ, அது திசை மாறி மாமன்னன் கொண்டாடப்படாமல், அது வில்லனுக்கான கொண்டாட்டமாக மாறி வருகிறது “