தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவரது அலுவலக பணியை சிறப்பாக செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரை தேடி வந்து வங்கியில் கடன் கொடுக்க முன் வந்தார்கள். இங்கு நடப்பதை பார்த்த உமாபதி ஒரு யோசனை கூறினார். இப்போதும் பிரேம்சந்த் அவரது ஒரு யூனிட்டை விற்க போகிறார். அதை தமிழ் வாங்கி நடத்தினால் கண்டிப்பாக முன்னேறலாம் என்று கூறினார். ஆனால் முதலில் தமிழ் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. உள்ள வேலையே அவரால் சரி வர செய்ய முடியவில்லை அதில் இதையும் எப்படி செய்வது என்று நினைத்தார். ஆனால் கடன் கொடுக்க வங்கியில் வந்து கொடுக்கும்போது எதற்காக யோசிக்க வேண்டும். இதை ஒரு நல்ல வாய்ப்பாக நினைத்து முன்னேறலாம் என்று கூறினார். பின் தமிழும் அதை சரஸ்வதியிடம் பேசி முடிவு எடுக்கலாம் என்று கூறினார். பின் சரஸ்வதி இடம் இதை பற்றி பேசி கடைசியில் அதை வாங்கி விடலாம் என்று முடிவும் செய்தார். இதனால் அடுத்த கட்டத்துக்கு போக முடியும் என்று நம்பினார். ஆனால் இந்த விஷயம் அர்ஜுனுக்கு தெரிய வந்தது. உடனே அதை தடுக்க வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டினார். உடனே கார்த்திக்கை அழைத்து இந்த நேரத்தில் அந்த கம்பெனியை வாங்கினால் நமக்கு நல்லது என்பது போல் பேசினார். அதற்கு கார்த்திக்கும் ஒப்புக்கொண்டார். பின் கோதையிடம் அதை பற்றி பேசி அவரிடமும் சம்மதம் வாங்கினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…