IPL | பெங்களுரு அணி நிர்வாகத்தில் மாற்றம், இனி ஒவ்வொரு சீசனும் கப் வேட்டை தான் போல!
பெங்களுரு அணி நிர்வாகத்தில் மாற்றம், இனி ஒவ்வொரு சீசனும் கப் வேட்டையை துவங்க இருக்கிறது பெங்களுரு அணி.
ஐபிஎல்-லில் 16 சீசன்கள் விளையாடி இருந்தும் கூட இன்னமும் ஒரு கோப்பையை கூட வென்றதில்லை பெங்களுரு அணி. அதனை கருத்தில் கொண்டு இந்த முறை பெங்களுரு அணி நிர்வாகம், திறன் மிக்க ஜிம்பாப்பேவை சேர்ந்த ஆன்டி பிளவர் அவர்களை தலைமை பயிற்சியாளராக நியமித்து இருக்கிறது. இனி ஒவ்வொரு சீசனும் ஆர்சிபிக்கு கப் வேட்டை தான் போல.
ஆன்டி பிளவர் ஒரு தலைசிறந்த கோச்சாளர். பயிற்சியாளராக இங்கிலாந்து அணியை கட்டமைத்தவர் அவர் என்று கூட கூறலாம். பல்வேறு அணிகளுக்காக தலைமை பயிற்சியாளராக இருந்து பல கோப்பைகளை வென்று கொடுத்து இருக்கிறார். நிச்சயம் இந்த முறை பெங்களுரு அணிக்கு ‘ஈ சாலா கப் நமதே’ தான் போல.
“ ஆர்சிபி அணிக்கான பயிற்சியாளர் போட்டியில் ரவி சாஸ்திரி அவர்களும் இருந்து இருக்கிறார் போல, ஆனால் ஆன்டி பிளவரையே கடைசியாக முடிவெடுத்து இருக்கிறது ஆர்சிபி நிர்வாகம், இது எந்த வகையில் பயன் தரும் என்பதை வரும் சீசன்களில் பார்க்கலாம் “