பும்ரா ஏதாவது ஒரு பார்மட்டை கைவிட்டால் மட்டுமே இனி கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியும்!
பும்ரா ஏதாவது ஒரு பார்மட்டை கைவிட்டால் மட்டுமே இனி கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியும் என சீனியர் கிரிக்கெட்டர் ஒருவர் கூறி இருக்கிறார்.
கடைசியாக பும்ராவை சர்வதேச கிரிக்கெட்டில் பார்த்து ஒரு வருடங்களுக்கும் மேல் ஆகிறது. தொடர் காயங்களால் அவதியுற்று வரும் பும்ரா, பல முக்கிய தொடர்களையும் மிஸ் செய்து இருக்கிறார். பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகவே இன்றளவும் இருக்கிறது. அவரை நிரப்பும் அளவுக்கு இந்தியா இன்றளவும் ஒரு பவுலரை தேர்ந்தெடுக்க முடியவில்லை.
மூன்று பார்மட்களிலும் பவுலராக ஜொலித்து வரும் பும்ரா, ஏதாவது ஒரு பார்மட்டை கை விட்டால் மட்டுமே இனி வரும் காலங்களில் ஜொலிக்க முடியும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய பவுலர் கிளென் மெக்ராத் கூறி இருக்கிறார். முக்கியமாக அவர் ஐபிஎல் போன்ற லாங் பார்மட்களை நிச்சயம் தவிர்க்கலாம் என்றும் கூறி இருக்கிறார்.
“ ஸ்டார்க் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள், அணியின் நன்மைக்காக ஐபிஎல் உள்ளிட்ட பிற பார்மட்களை தவிர்த்து வருகின்றனர். அது போல இந்திய வீரர்களும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் நினைத்தால் ஐபிஎல் போன்ற லாங் பார்மட்களை தவிர்த்து சர்வதேச போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “