அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விட வங்கி கூட்டமைப்பு நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை!
அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடக்கோரி வங்கி கூட்டமைப்புகள் நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்து இருக்கின்றன.
ஒரு மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு ஏற்கனவே விடுமுறை இருக்கும் நிலையில், வங்கி கூட்டமைப்புகள் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடக்கோரி நிதி அமைச்சகத்திடம் எழுத்து பூர்வமாக கோரிக்கை விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படும். இதனால் பளு மக்களுக்கா வங்கி ஊழியர்களுக்கா என்று கேட்டால் இருவருக்கும் தான் என்றே கூற வேண்டும். ஒரு வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை என்னும் போது பணம் எடுக்க, போட வங்கியை அணுகுகிற எளிய மக்களின் பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான்.
“ இது நடைமுறைக்கு வந்தால் வார நாட்களில் தனியார் வங்கி ஊழியர்களின் மீது கடும் வேலை திணிக்கப்படும். இதனால் அவர்களுக்கும் மன அழுத்தம் தான் என்கின்றனர் இணையவாசிகள் “