Eeramana Rojave 2 Today Episode | 15.08.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா காவ்யாவை பார்த்திபன் அருகில் அமர்த்தி சாப்பிட வைத்தார். ஆனால் பார்த்திபன் எழுந்துவிட்டார். பின் காவ்யா இந்த விஷயத்தில் எந்த தவறும் செய்யவில்லை. இதற்கு முழு காரணமும் பார்த்திபன் தான் என்று கூறினார். அவர் ஒரு நாளும் சந்தோசமாக வைத்துக்கொள்ளவில்லை அதனால் தன குழந்தை கலைந்து விட்டது என்று கூறினார். அதற்கு அருணாச்சலம், ஜீவா மற்றும் லிங்கம் மூவரும் பிரியா சொன்னதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார். ஆனால் பார்த்திபன் மற்றும் பார்வதி காவ்யா மேல் தான் எல்லா தவறும் உள்ளது என்று கூறினார்கள். பின் காவ்யா இன்று ஒரு நாள் உன்னோடு தூங்குகிறேன் என்று கேட்டுக்கொண்டார். உடனே பிரியா அவரது அறையில் ஜீவாவை மொட்ட மாடிக்கு செல்லும்படி கூறினார். பின் காவ்யாவை அவரே தூங்கவும் வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author