தூத்துக்குடி, விளாத்திகுளம் அருகே விறுவிறுப்பாக நடைபெறும் விஷால் 34 படப்பிடிப்பு!

விஷால்- இயக்குநர் ஹரி இணையும் விஷால் 34 திரைப்படத்தின் ஷூட்டிங் விளாத்திகுளம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹரி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஷால், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் விஷால் 34 திரைப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடி மற்றும் விளாத்திக்குளம் பகுதிகளை சுற்றிய கிராமங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

தாமிரபரணி திரைப்படம் போல ஒரு கதைக்களமே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இயக்குநர் ஹரியும் அது போல ஒரு கதைக்களத்தை தான் கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது. நிச்சயம் விஷால், ஹரி கூட்டணியில் மற்றுமொரு சென்சேசனல் ஹிட்டை எதிர்பார்க்கலாம்.

“ ஆகஸ்ட் இறுதியில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம் “

About Author