தாமதமாகும் ஜப்பானின் நிலவில் ஆய்வு கொள்ளும் ஸ்லிம் மிஷன்!
சாதகமற்ற வானிலையால் ஜப்பானின் நிலவை ஆய்வு கொள்ளும் ஸ்லிம் மிஷன் தாமதமாகி இருக்கிறது.
இன்று நிலவுக்கு ஏவப்பட இருந்த ஜப்பானின் ஸ்லிம் மிஷன், சாதகமற்ற வானிலை சூழலால் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. ரெடியாக பாய இருந்த எச்.2.ஏ ராக்கெட் ஜப்பானின் தனேகஷிமா விண்வெளி மையத்தில் தற்போது அப்படியே நின்று கொண்டு இருக்கிறது. வானிலை சாதகமாகும் சமயத்தில் மீண்டும் இந்த ஆய்வு தொடரப்படும் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
“ இந்த மிஷன் சாத்தியமாகும் பட்சத்தில் அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியாவை அடுத்து ஜப்பான் ஐந்தாவது நாடாக நிலவில் கால் பதிக்கும் “