ஆசியகோப்பையின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இருக்கிறது.
இலங்கை மற்றும் வங்கதேசம் இடையிலான ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் முதலில் ஆடிய வங்கதேசம் பதிரானா மற்றும் தீக்சனாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 164 ரன்கள் மட்டும் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி 39 ஓவர்களின் 5 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து இலக்கை எளிதாக எட்டிப் பிடித்தது.
“ சென்னை அணியின் பந்து வீச்சாளர்களாக பதிரானா மற்றும் தீக்சனா இருவரும் வங்கதேச நாகினிகளை சுருட்டி பையில் போட்டு கொண்டு இலங்கை அணிக்கு வெற்றியை தேடி தந்து இருப்பதாக சென்னை அணி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர் “