ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் இடைநீக்கம்!
Hima Das Suspended For Violating Doping Regulation Idamporul
ஊக்க மருந்து விதிமுறையை மீறியதாக கூறி ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் இடைநீக்கம்.
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை விதிகளின் படி, தடகள வீரர்கள், ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்துவதற்கு வசதியாக, தான் இருக்கும் இடத்தை முகமைக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். கடந்த 12 மாதங்களில் தனது இருப்பிடம் குறித்த தகவலை 3 முறை, ஹிமா தாஸ் தெரிவிக்க தவறியதால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் மூலம் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
” அதிகபட்சமாக தடகள வீராங்கனை ஹிமா தாஸ் அவர்களுக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் தடை விதிக்க கூடும் என தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையில் இருந்து தகவல் வெளியாகி வருகிறது ”