நடிகர் விஜய் அவர்களின் ’லியோ’ ஆடியோ வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டது ஏன்?
நடிகர் விஜய் அவர்களின் ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்படாததற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இசை வெளியீட்டிற்கான எல்லா வேலைகளும் நடந்து முடிந்த பின்னர் ஏன் ஆடியோ வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டது என்ற கேள்வி தான் இன்று இணையதளங்களில் நிரம்பி இருக்கிறது.
சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் இசை நிகழ்வில் நடந்த நெருக்கடிகள் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் டெங்கு பரவலும், காரணமாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் ரீதியான முன்னெடுப்புகளுக்கு இது ஒரு களமாக அமைந்து விட கூடாது என்பதற்காக இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
ஒரு பக்கம் தயாரிப்பு நிறுவனமே முன் வந்து இதில் அரசியல் ஏதும் இல்லை, மக்களின் நலன் கருதியே இசை வெளீயீட்டு விழா நிறுத்தப்பட்டதாகவும் கூறி வருகிறது. ஆனால் ரசிகர்களோ இந்த இசை வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டதற்கான காரணம் முழுக்க முழுக்க அரசியலே என இணையதளங்களில் காரசாரமாக பதிவிட்டு வருகின்றனர்.
“ என்ன காரணம் இருக்கிறதோ அது வெளிப்படையாக புலப்படவில்லை, நடிகர் விஜய் போன்ற ஒரு பெரிய நடிகரின் படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழாக்கள் தான், படத்திற்கு ஒரு பெரிய புரோமோசனாக அமையும், அது நடக்கவில்லை என்பது ஒவ்வொரு ரசிகனுக்கும் சற்றே வருத்தங்கள் தான் “