Bigg Boss Tamil 7 | Day 1 | Review | ‘முதல் நாளே இரண்டாக பிளவுற்ற வீடு’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் முதல் நாளில் என்ன என்ன சுவாரஸ்யமான விஷயங்கள் நிகழ்ந்தது என்பதை, இந்த ரிவ்யூவில் தெளிவாக பார்க்கலாம்.
ஹைலைட்ஸ் : கேப்டன்சிப் – பெரிய வீடு – குட்டி வீடு – நாமினேசன் – பிக்பாஸ் சூப்பர் மார்க்கெட் – பவாவின் கதை
’யாரு பர்ஸ்ட் வர்றாங்கன்னு முக்கியம் இல்ல, யாரு கடைசில பர்ஸ்ட் வர்றாங்கன்னு தான் முக்கியம்’ என்ற சிலம்பரசனின் டையலாக்கிற்கு ஏற்ப, பிக்பாஸ் இல்லத்திற்குள் கடைசி போட்டியாளராக நுழைந்து விட்டு, பிக்பாஸ் சீசன் 7-யின் முதல் கேப்டனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் விஜய் வர்மா.
’நான் ரெடி தான் வரவா’ என்ற வெறித்தனமான லியோ பாடலுடனும், இல்லத்தார்களின் அதிரடியான நடனத்துடனும் பிக்பாஸ் சீசன் 7 இல்லம் இனிதே விடிகிறது.
அடுத்தகட்டமாக கேப்டனை ஈர்க்காத 6 பேர் என்ற கேள்வியை விஜய் வர்மாவிடம் பிக்பாஸ் முன் வைக்க, அவரும் ஒருசிலரின் பெயர்களை தைரியமாக சொல்ல, இரண்டாவது வீடு ஏன் என்ற கேள்விக்கு அதில் ஒட்டு மொத்தமாக பதில் கிடைத்து விடுகிறது.
அதாவது ஒவ்வொரு வாரமும் கேப்டனை ஈர்க்காத ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு குட்டி வீட்டிற்குள் அனுப்பப்படுவார்களாம். அவர்கள் தான் பெரிய வீட்டில் இருப்பவர்களுக்கு சமைக்க வேண்டும். டாஸ்க்கில் பங்கு பெற முடியாது. பெரிய வீட்டிற்குள் நுழைய முடியாது என அவர்களுக்கென்று சில ரூல்கள்.
அந்த வகையில் இந்த வாரம் குட்டி வீட்டிற்குள் செல்லும் அறுவர்: நிக்சன், ரவீனா, ஐஸ்ஷு, பவா செல்லதுரை, வினுஷா தேவி, அனன்யா ராவ்
அடுத்ததாக நாமினேசன் பிராசஸ், அதுவும் கொஞ்சம் வித்தியாசமாக இரண்டு நாமினேசன், பெரிய வீட்டில் இருப்பவர்கள் குட்டி வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும், குட்டி வீட்டில் இருப்பவர்கள் பெரிய வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும். வழக்கம் போல ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்ய வேண்டும் அவ்வளவு தான் நாமினேசன் ரூல்.
அந்த வகையில் ஒவ்வொருவரும் நாமினேட் செய்த போட்டியாளர்கள்:
Contestant | Nomination |
Poornima | Aishu, Ananya |
Cool Suresh | Bava Chella Durai, Aishu |
Pradeep | Vinusha, Ananya |
Mani | Bava Chelladurai, Ananya |
Akshaya | Raveena Daha, Aishu |
Saravanan | Nixen, Ananya |
Jovika | Aishu, Raveena Daha |
Vishnu | Bava Chelladurai, Aishu |
Maya | Raveena Daha, Nixen |
Yugendran | Raveena Daha, Ananya |
Vichithra | Ananya, Aishu |
Vijay (Captain) | Bava Chelladurai, Ananya |
Raveena Daha | Jovika, Yugendran |
Nixen | Pradeep, Jovika |
Vinusha | Yugendran, Maya |
Bava Chelladurai | Cool Suresh, Pradeep |
Ananya | Jovika, Yugendran |
Aishu | Jovika, Pradeep |
இறுதியாக பைனல் நாமினேசனுக்கு செல்பவர்கள்: பாவா செல்லதுரை, ரவீனா தாஹா, பிரதீப், யுகேந்திரன், ஜோவிகா, அனன்யா ராவ், ஐஸ்ஷு
ஷாப்பிங்கிற்கு புதியதாக லக்ஸ்சுவரி பட்ஜெட் டாஸ்க் என்று இல்லாமல், புதியதாக பிக்பாஸ் சூப்பர் மார்க்கெட் என்பதை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் இந்த சூப்பர் மார்க்கெட்டில் வீட்டிற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் மதிப்பு கணக்கீடு செய்யப்பட்டு அது கடனாக கொள்ளப்படுமாம். பின்னர் வாரத்திற்கு நடைபெறும் 3 டாஸ்க்குகளின் பாயிண்ட்ஸ்களை வைத்து அந்த கடனை அடைக்க வேண்டுமாம். அவ்வளவு தான் இந்த புதிய சூப்பர் மார்க்கெட் ரூல்.
மற்றபடி பெரியாத முதல்நாளில் ஏதும் கலவரம் இல்லை, நாமினேசன் பிராசஸ்சில் விசித்ரா, ஐஸ்ஷுவை ஆடை ரீதியாக நாமினேட் செய்தது மட்டும் கொஞ்சம் உறுத்தியது. அவர் அதை பொதுவெளியில் நாமினேசன் பிராசஸ்சில் சொல்லாமல், கேர் எடுப்பதாக இருந்தால் அவரிடமே சொல்லி இருக்கலாம். நிக்சன் மற்றும் யுகேந்திரனின் பாடல் அருமை. இறுதியாக பவா செல்லதுரையின் ‘ஓட்டம்’ என்ற கதையும் அருமை. தொடர்ந்து நிறைய கதைகளை அவரிடம் இருந்து கேட்கவும் ஆவல்.
” சின்ன வயதில் பள்ளி பருவங்களில் எப்போதாவது வாத்தியார்கள் கதை செல்வார்கள். அப்போது பின் ட்ராப் சைலண்டுடன் அந்த கதையை கூர்ந்து கேட்ட அனுபவங்கள் உண்டு. அதை பவா பலருக்கும் நினைவுப்படுத்தி இருக்கிறார். முதல் நாள் பிக்பாஸ் இல்லத்திற்குள் நிகழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் இவ்வளவு தான். “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம் பொருள் இல்லத்தினுள் இருந்து உங்கள் லெ. ரமேஷ்!