வட்டு எறிதலில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற கமல் பீரித் கவுர் – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிர் வட்டு எறிதல் பிரிவில் 64 மீ தூரத்திற்கு எறிந்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பஞ்சாப்பின் இளம் சிங்கம் கமல் பீரித் கவுர்.

வயது 25, அம்மா அப்பா இருவரும் விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள். முதல் ஒலிம்பிக், இடம்பெற்றது குரூப் பி-யில் அவரைச்சுற்றி இருப்பவர்களெல்லாம் உலகின் நம்பர் 1, நம்பர் 4, நம்பர் 5 வீராங்கனைகள், ஆயினும் பயமில்லை இந்த இளங்கன்றுக்கு. குருப் ஏ, குரூப் பி சேர்த்து ஒட்டு மொத்த 31 எறிதல் வீராங்கனையினுள் இருவரே 64 மீட்டர் எறிந்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். அந்த இருவருள் கமல் பீரித் கவுரும் ஒருவர்.

இதற்கு முன்பு கிருஷ்ணா பூனியா மட்டுமே ஒலிம்பிக்(2012) வட்டு எறிதல் பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவர் என்ற சாதனையை தன் வசம் கொண்டிருந்தார். தற்போது இரண்டாவதாய் கமல் பீரித் கவுரும் அந்த வரிசையில் இடம் பெற்றிருக்கிறார்.

“ பயமறியா இந்த இளங்கன்று நிச்சயம் வரும் பதக்கத்தை வென்று ”

About Author